திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் நிகழ்த்திய அதிசயம்! அந்த பெண் இப்போ ஹேப்பி!

Published On:

| By Kumaresan M

lord muruga

திருச்செந்தூர் கடலில் தொலைந்து போகும்  நகைகள் மீண்டும் கிடைப்பது பல முறை அதிசயம் போல நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க சங்கிலியை குளிக்கும்போது கடலில் விட்டுவிட்டார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடினர் பின்னர்,  கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்து அவரிடம் வழங்கினார் . அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி சாரா. இந்த தம்பதிக்கு கல்பனா என்ற மகள் உண்டு.  இவர்கள் குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூர் வந்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் புனித நீராடினார்கள். அப்போது கல்பனா தனது கையில் வைரக்கல் பதித்த கைச்செயினை அணிந்திருந்தார்.

திடீரென்று அந்த கைச்செயின்  மாயமானது.  அந்த வைர பிரெஸ்லெட்  ஒன்றரை லட்சம் விலை கொண்டது என்பதால் கல்பனா மற்றும் குடும்பத்தினர் கண் கலங்கினர். இதையடுத்து, சிப்பி சேகரிக்கு தொழிலாளர்கள், கடற்படை பாதுகாவலர்கள் ஆகியோர் சேர்ந்து வைர பிரெஸ்லைட்டை  தேட தொடங்கினர்.

நீண்ட நேர தேடலுக்கு பிறகு, அந்த வைர  பிரெஸ்லெட் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னிலையில் அந்த பிரெஸ்லெட் கல்பனாவிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனால், மன மகிழ்ச்சியடைந்த கல்பனா நெக்லசை மீட்டு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், மீண்டும் கோவிலுக்குள் சென்று  செந்தில்நாதனை மனமுருகி வழிபட்டு, ஆத்ம திருப்தியுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

– எம். குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வினோத் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா? : இன்று இரவு தீர்ப்பு!

தொடரும் துயரம் : தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் நீட் தேர்வு மையம்!

‘ ஹாட் ஸ்பாட்’ 2 ரெடி… புரோமோ எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share