கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 50% ஊதிய உயர்வு!

Published On:

| By admin

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 50 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், நிலுவை தொகை வழங்க பரிசீலனை செய்யப்படும் என்றும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் மதிய உணவு இடைவெளியின்போது, பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை ரூ.130இல் இருந்து ரூ.150 ஆகவும், விடுமுறை நாட்களில் பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை ரூ.250இல் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தி ரூ.500 ஆகவும் கடந்தாண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
50 சதவிகிதம் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை மற்றும் ஈட்டிய விடுப்பு வித்தியாச நிலுவை தொகை நிதி நிலைக்கு ஏற்ப வழங்க பரிசீலனை செய்யப்படும். அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுபடி வழங்க அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சரக்கு இருப்பு பரிசோதனை செய்யப்படும்போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவு படி விற்பனையில் 0.15 சதவிகிதம், அதிகபட்சம் ரூ.20,000 வழங்க அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share