கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.200 கோடி!

Published On:

| By Balaji

20 சதவிகிதம் தள்ளுபடி அறிவிப்புடன் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.200 கோடியாக நிர்ணயித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நாடு முழுவதும் 167 விற்பனை நிலையங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அனைத்து பொருட்களும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு, கைத்தறி சில்க் வகை பொருட்களுக்கு 1,000 ரூபாய் வரை 30 சதவிகிதமும், 1,000 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவிகிதமும், ஏற்றுமதி வகை உட்பட கைத்தறி காட்டன் வகை பொருட்களுக்கு 500 ரூபாய் வரை 30 சதவிகிதமும், 501 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவிகிதமும், விசைத்தறி வகை பொருட்கள் அனைத்து வகையான விலையில் 20 சதவிகிதம் வரையும், அனைத்து கைத்தறி தள்ளுபடி இல்லா பொருட்கள் அனைத்து வகையிலும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி தர வேண்டும்.

ADVERTISEMENT

இந்தத் தள்ளுபடி நவம்பர் 30ஆம் தேதி வரை இருக்கும். இந்த ஆண்டு ரூ.200 கோடி வருவாய் இலக்கை அடையும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் அலோக் பாப்லே அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி வந்ததை தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 20 சதவிகிதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share