சென்னை மெட்ரோ: பெண்களின் பாதுகாப்புக்காக ‘Pink Squad’

Published On:

| By christopher

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ‘பிங்க் ஸ்குவாட்’ (Pink Squad) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சித்திக் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது முதற்கட்டமாக ‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 12,000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ‘பிங்க் ஸ்குவாட்’ உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேவையற்ற அரட்டை, பேச்சுக்கள் குறித்தும் ‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பிடம் பெண் பயணிகள் புகார் அளிக்கலாம் எனவும், மகளிருக்காக பிரத்யேக தொடர்பு எண் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.எம்.ஆர்.எல். உதவி எண் 1860 425 1515-ஐ தொடர்பு கொண்டாலும் ‘பிங்க் ஸ்குவாட்’ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் தைலம் தடவும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா

ஏதே டைட்டானிக்கும்… இந்தியா கூட்டணியும் ஒன்னா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share