கர்நாடகாவில் வெற்றி: சோனியா, ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

Published On:

| By Monisha

stalin wish rahul sonia gandhi

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோனிஷா

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share