மதுரையில் மு.க.அழகிரி வீட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆதரவாளர்கள் உற்சாகம்!

Published On:

| By Minnambalam Desk

MK Stalin MK Azhagiri

திமுக பொதுக்குழு கூட்டத்துக்காக மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரரான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து பேசினார். CM Stalin Visits Alagiri Residence

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்காக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி சுமார் 3.30 மணிநேரம் நடைபெற்றது. இதன் பின்னர் மதுரை முன்னாள் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்துவிட்டு தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள மு.க. அழகிரி வீட்டுக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு முதல்வர் ஸ்டாலினை மு.க.அழகிரியும் அவரது குடும்பத்தினரும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து புறப்படும் போதே முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமது வீட்டில் இரவு டின்னருக்கு வர வேண்டும் என மு.க.அழகிரி அழைத்தை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம். C

தற்போது மு.க. அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியிருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share