முதல்வரின் மூன்று நாள் பயணத்திட்டம் : சிதம்பரத்துக்கு ரயிலில் புறப்பட்ட ஸ்டாலின்

By Minnambalam

|

Published on 14 Jul 2025, 8:32 PM

முதல்வர் ஸ்டாலின் நாளை, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சிதம்பரம் புறப்பட்டுச் சென்றுள்ளார். cm stalin travelled by train to chidhambaram

முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூலை 15) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கவுள்ளார்.தொடர்ந்து மயிலாடுதுறை சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

இதையொட்டில் இன்று (ஜூலை 14) மாலை 5.30 மணிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கிளம்பினார். முதல்வர் வருகையையொட்டி ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடைந்த முதல்வருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

பின்னர், அங்கிருந்து 6.10 மணிக்கு கிளம்பிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரம் புறப்பட்டார் ஸ்டாலின்.

அவரை தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். திமுக எம்.பி.டி.ஆர் பாலுவும் முதல்வருடன் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

இரவு 9.40 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையம் சென்று பின்பு அங்கிருந்து புறப்பட்டு 10.00 மணிக்கு கிராண்ட் பார்க் ஹோட்டல் சென்று இரவு தங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

நாளை 15.07.2025 காலை 09.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 09.20 மணிக்கு சிதம்பரம் அரசு மகளிர் ஹையர் செகண்டரி பள்ளி சென்று நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.,

நிகழ்ச்சி முடிந்த பின்னர் வாண்டையார் மண்டபம் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து சிதம்பரம் பேட்டை சென்று அம்பேத்கார் சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

அதைதொடர்ந்து முன்னாள் எம்.பி., எல்.இளையபெருமாள் நூற்றாண்டு ஹால் சென்று ஹால் மற்றும் இளையபெருமாளின் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் பரமேஸ்வரநல்லூர் சென்று அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கொள்ளிடம் பாலம் அருகே சோதியகுடி சென்று கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார்.

அதன்பின், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று மதியம் தங்குகிறார்,

மாலை அங்கிருந்து புறப்பட்டு 5.00 மணிக்கு சம்பாதனிருப்பு சென்று ரோட்ஷோ நடத்துகிறார். மயிலாடுதுறை சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்குகிறார்,

அதற்கு அடுத்த நாள் 16.07.2025 காலை சர்க்யூட் ஹவுசில் இருந்து புறப்பட்டு 11.00 மணிக்கு ஏவிசி கல்லூரி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் மயிலாடுதுறை ரயில் நிலையம் சென்று 1.10 மணிக்கு சோழன் விரைவு ரயில் மூலம் பயணம் செய்து 6.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு கார் மூலம் தனது இல்லத்துக்கு சென்றடையவுள்ளார்.

முதல்வர் ரயிலில் பயணிப்பதை ஒட்டி ரயில் நிற்கும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டு “கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் வேலூர், திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக ரயிலில் சென்று வந்தார்.

முதல்வரான பின்னர் மூன்றாவது முறையாக இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். cm stalin travelled by train to chidhambaram

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel