கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:
- நவ.25-ந் தேதி, உலகத் தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு
- நவ.25-ந் தேதி மாலை கோவையில் தொழில் துறை சார்பில் “TNRise” நிகழ்ச்சி.பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
- நவ.26-ந் தேதி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு.
- ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துதல்
- நவ.26-ல் ஈரோட்டில் ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- நவ.26-ல் ஈரோடு சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், ரூ.50 இலட்சம் செலவில் பால்வளத் தந்தை சி.கு. பரமசிவன் சிலை திறப்பு
