தமிழகத்தில் மினி பஸ் சேவை எப்போது? – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

Published On:

| By Minnambalam Desk

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மினி பஸ் சேவை தொடங்கப்பட்டு, பிறகு அவை நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஊரகப் பகுதிகளில் மினி பஸ் சேவையை தொடங்க முடிவெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. Stalin launch mini bus

இதற்கான விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மினி பேருந்து சேவைக்கான வழித்தடங்களை கண்டறியும் பணிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

போதுமான அரசு பேருந்துகள் இல்லாத வழித் தடங்களில் 25 இருக்கைகள் கொண்ட தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மினி பேருந்துகளை இயக்குவதற்கு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “புதிய மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,710 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  

ADVERTISEMENT

அவற்றில் 1,255 வழித்தடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளன.  ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மே 1-ஆம் தேதி புதிய மினி பேருந்துகள் இயக்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “மிகவும் குக்கிராமமாக இருக்கும் பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மினி பஸ் சேவையை முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். அந்த வகையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெரிய பேருந்துகள் இயக்க முடியாத குறுகிய வழித் தடங்கள், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு மினி பேருந்து சேவை பயனுள்ளதாக இருக்கும்.  போக்குவரத்து சேவை தேவைப்படும் கிராமங்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அதுகுறித்து தெரிவிக்கலாம்.

புதிய மினி பேருந்துகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தினாலும், பயன்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் இல்லை. கூடுதல் பேருந்து சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்” என்று தெரிவித்தார். Stalin launch mini bus

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share