தஞ்சாவூர், சேலத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்குகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 23) தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2000-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் சென்னையில் டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் ஐடி துறையை மாநில முழுவதும் விரிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சேலம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டது.
இதில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட டைடல் பார்க் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்குகள் இன்று திறக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா
தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் M/s. Hamly Business Solutions India Pvt. Ltd., M/s. Inforios Software Technologies India Pvt. Ltd., ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் 30 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மினி டைடல் பூங்கா
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூர் கிராமம், ஆனைக்கவுண்டன்பட்டியில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுரடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தில் M/s. Namma Office, M/s. AKS Hitech Smart, M/s. Tamil Zorous Pvt. Ltd., M/s. Telth Healthcare Pvt. Ltd., Solutions, M/s. Access Healthcare ஆகிய நிறுவனங்களுக்கும் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் 71 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரு மினி டைடல் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஆந்திரா குவாரியில் சிக்கிய சீசிங் ராஜா… ரவுடியாக உருவாக்கிய பைனான்ஸ் கம்பெனிகள்!
ஆந்திரா குவாரியில் சிக்கிய சீசிங் ராஜா… ரவுடியாக உருவாக்கிய பைனான்ஸ் கம்பெனிகள்!