மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த கார் டயர் வெடித்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரை திரும்பிக் கொண்டிருந்தார்.
திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது, முதல்வர் பயணித்த காரின் டயர் வெடித்துள்ளது. இதையடுத்து சாதுரியமாக ஓட்டுநர் காரை ஓரம்கட்டி நிறுத்தினார்.
சுமார் 140 கிமீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்ததாக தகவல்கள் வருகின்றன.
நல்வாய்ப்பாக, இந்த சம்பவத்தின் போது முதல்வர் ஸ்டாலினுக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முதல்வர் பாதுகப்பாக வேறு காரில் மதுரை அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன்பின்னர், டயர் வெடித்த காரை சரி செய்து எடுத்துச்சென்றுள்ளனர்.
