திண்டுக்கல்லில் இன்று ஜனவரி 7-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 30,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து கார் மூலம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக வரவேற்பளிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- ரூ.1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- இதில் 111 முடிவுற்ற பணிகள், 212 புதிய பணிகள் ஆகும்.
- 30,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
- 1,02,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
- இந்த விழா மைதானத்தில் அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிடுகிறார் ஸ்டாலின்
- அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
