‘ராஜ்பவன்’ பெயர் மாற்றம் – ஸ்டாலின் எதிர்ப்பு- காரணம் என்ன?

By Mathi

|

Published on 30 Nov 2025, 4:20 PM

CM MK Stalin

நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை ராஜ்பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதை லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என மாற்றுவது தேவையில்லாதது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து மாநில ஆளுநர்/ துணை நிலை ஆளுநர் மாளிகைகள் லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ”பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே! என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel