கே. டி. ராகவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

Published On:

| By Aara

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. யின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக  முதலமைச்சர் ஸ்டாலின் சென்று இருக்கிறார்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த  முன்னாள் பொதுச் செயலாளரான கே. டி. ராகவன் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் முதலமைச்சருக்கு தெரியவந்திருக்கிறது. 

ADVERTISEMENT

அந்த வகையில் தனது தங்கையின் கணவரது ஹெல்த்  பற்றி விசாரித்து விட்டு அப்படியே கே. டி. ராகவனின் உடல் நலத்தையும் விசாரித்து அறிந்து கொண்டு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பவர்ஃபுல்லாக இருந்த கே. டி. ராகவன் சமீப காலங்களாக பாஜகவின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவரது டெல்லி தொடர்புகள் தொடர்ந்து வலுவாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வேந்தன் 

பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்

ADVERTISEMENT

இறையன்புவுக்கு புதிய பதவி: ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share