“மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது”: முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Selvam

திரை உலகில்‌ தனக்கென ஒரு முத்திரையை பதித்த மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் மயில்சாமி இன்று (பிப்ரவரி 19) அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில், “பிரபல நகைச்சுவை நடிகர்‌ மயில்சாமி அவர்கள்‌ மறைந்தார்‌ என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன்‌. பல குரல்களில்‌ நகைச்சுவையாகப்‌ பேசும்‌ ஆற்றல்‌ படைத்த அவர்‌, தன்னுடைய ஒலிநாடாக்கள்‌ வழியாக தமிழ்நாடு முழுவதும்‌ அறிமுகமானவர்‌.

காமெடி டைம்‌ நிகழ்ச்சியின்‌ மூலம்‌ தமிழ்நாட்டு மக்களின்‌ இல்லங்களில்‌ ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப்‌ பெற்றவர்‌.

ADVERTISEMENT

கலைஞர்‌ அவர்களின்‌ பாராட்டைப்‌ பெற்றவர்‌. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில்‌ தன்னுடைய கருத்துகளை ஆழமாகப்‌ பதிவு செய்யக்கூடியவர்‌. திரை உலகில்‌ தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவரது பிரிவால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கும்‌ திரையுலகக்‌ கலைஞர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” என்றுள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

உக்ரைன் போர்: ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் 30,000 பேர் மரணம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share