பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்!

Published On:

| By Selvam

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிதமாக உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.உலகை வெல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

செல்வம்

ADVERTISEMENT

லக்னோ அணியிலிருந்து விலகிய மார்க் உட்: காரணம் இதுதான்!

தமிழ்நாட்டில் அமைதியைச் சீர்குலைப்பதா?: உச்ச நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share