திருப்பதி கூட்டநெரிசல்… சந்திரபாபு நாயுடு கொடுத்த உறுதி!

Published On:

| By Selvam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, இலவச தரிசன டிக்கெட்டுக்கான டோக்கன் இன்று அதிகாலை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து டிக்கெட் கவுன்ட்டர்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா, நிர்மலா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலை திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருப்பதி கோவிலில் கண்காணிப்பு அமைப்பில் சில பிரச்சனைகள் இருந்தது. கண்காணிப்பை முறைப்படுத்த தவறிய, இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான(TTD) இணை நிர்வாக அதிகாரி, திருப்பதி எஸ்பி மற்றும் மற்றொரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தான் மிகவும் வேதனை அடைந்ததேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்த 33 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

சார்னு சொன்னாலே பக்குன்னு இருக்கு அப்டேட் குமாரு

இனிமே இதுதான் கிங்… பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் – அசந்து போன ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share