1998 அதிபர் ஆபிஸ் காதல்- கிளிண்டன் பற்றி மோனிகா இப்போது சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி ஆகியோர் இடையே தகாத உறவு இருந்தது கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியுலகுக்கு அம்பலமானது. மோனிகா லெவின்ஸ்கியின் நீல நிற உடையில், அதிபர் கிளிண்டனின் விந்தணு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த உறவை கிளிண்டன் மறுத்தார். clinton errors reprehensible monika

ஆனால், இருவருக்கும் இருந்த உறவு உறுதி செய்யப்பட்டதால், அதே ஆண்டில் குடியரசுக் கட்சியினர் கிளிண்டன் மீது பதவிநீக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றினர். ஆனால், அது செனட் சபையில் நிறைவேறவில்லை. இதனால், கிளிண்டனின் பதவி தப்பியது.

லிண்டா டிரிப்

அதே வேளையில், கிளிண்டன் மோனிகா உறவை வெளியுலகுக்கு அம்பலப்படுத்திய லிண்டா டிரிப் என்ற ஊழியர் 2001 ஆம் ஆண்டு கிளிண்டன் பதவி முடிந்த கடைசி நாளில் பதவி நீக்கமும் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மோனிகாவின் தோழி ஆவார். தற்போது, லிண்டா டிரிப் புற்று நோய் காரணமாக இறந்தும் போனார். clinton errors reprehensible monika

இந்த நிலையில் ‘ கால் ஹெர் டாடி ‘ என்ற பாட்காஸ்டில் மோனிகா பேசியுள்ளார். அப்போது, கிளிண்டன் குறித்து அவர் கூறியதாவது ‘கிளிண்டனுடன் உறவில் இருந்த போது எனக்கு 22 வயதுதான் ஆகியிருந்தது. அவர், தனது தனிப்பட்ட சுகத்துக்காக என்னை பயன்படுத்தி கொண்டார். அவர் தனது செயலுக்காக அதிபர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் எனது தவறும் உள்ளது.

மோனிகா லெவின்ஸ்கி

அதை வேளையில், கிளிண்டன் செய்த தவறுதான் மிகவும் மோசமானது. என்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எனது சம்மதத்துடன்தான் அனைத்தும் நடந்தது. ஆனால், நாட்டிலேயே மிக சக்தி வாய்ந்த மனிதரான அவர், என்னிடம் அப்படி நடந்திருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு இந்த சம்பவம் வெளியே கசிந்த போது, பில்கிளிண்டனுக்கு 49 வயதாகியிருந்தது. தற்போது, மோனிகாவுக்கு 51 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share