தமிழ்நாடு அரசின் ‘தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு’ எழுதி தேர்வானால் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ1,500 உதவி தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தற்போது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை அனுப்ப நாளை செப்டம்பர் 4-ந் தேதி கடைசி நாள்.
மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் ” தமிழ் மொழி திறனறித் தேர்வு” அக்டோபர் மாதம் 11-ந் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வில் தேர்வாகும் மாணவர்கள் 1500 பேருக்கு மாதம் ரூ1,500 ஊக்கத் தொகை, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
பாடம்: 2025-2026-ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட திருத்தி அமைக்கப்பட்ட தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள 7 இயல்களில், கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத “இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம், இயல் 6-ல் உள்ள முத்தொள்ளாயிரம், இயல் 7-ல் அக்கறை ஆகியவற்றைத் தவிர, ஏனைய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும்.
2025-26-ம் கல்வியாண்டில், தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இம்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in-ல் தரவிறக்கம் செய்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 4-ந் தேதி கடைசி நாள்.
இந்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்:
