பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 5 மணி முதல் அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Clashes with Pakistan Come to an End
டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், இந்திய ராணுவ தரப்பை இன்று பிற்பகல் 3.35 மணிக்கு தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் அனைத்துவிதமான தாக்குதல்களையும் நிறுத்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலம், வான் மற்றும் கடல் வழியிலான அனைத்துவிதமான தாக்குதல்களையும் மாலை 5 மணி முதல் இருநாடுகளும் நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 12-ந் தேதி பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்..
முன்னதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில், இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கலை நிறுத்த ஒப்புக் கொண்டுவிட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இருநாடுகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தமாக முடிவெடுத்துள்ளன. இருநாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். Clashes with Pakistan Come to an End