ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு பொதுமக்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். Civilians Must Leave Tehran Immediately” – Trump’s Urgent Warning to Iran!
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டாக வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் ஈரான் கையெழுத்திடவில்லை. அவமானம்! மனித உயிர்களை வீணடிக்கிறது ஈரான்! அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருக்க முடியாது என்றுதான் சொல்ல முடியும். எல்லாமும் போதும்! ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் வெளியேறுங்கள்!. இவ்வாறு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நெருக்கடிகளை ஈரான் ஏற்க மறுத்தது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் 4 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்துகிறது. ஈரானும் பதிலடி தருகிறது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருகிறது. தாங்கள் ஏவும் ஏவுகணைகள், டிரோன்களை அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அழித்து வருவதாகவும் ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் முழுவீச்சில் பதிலடி தர முடியாமல் இருப்பது அந்நாட்டு மக்களை அதிருப்தி அடையச் செய்திருப்பதாகவும் சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.