வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் சலுகை வழங்க கோரி சிஐடியூ தீர்மானம்

By Mathi

|

Published on 9 Nov 2025, 1:59 PM

CITU CBE

தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த (வட இந்திய) தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் சட்ட சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று சிபிஎம் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியூ-வின் 16வது மாநில மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற சிஐடியூ-வின் 16வது மாநில மாநாட்டில், “தமிழ்நாடு மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்; தேசிய பஞ்சாலைகளை இயக்கிடவும் பணி நிரந்தரம் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், ” தமிழகத்தில் அஸ்ஸாம்,மேற்கு வங்கம், பீகார், உ.பி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் இருந்து வந்து தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள், கட்டுமானம், விவசாயம் போன்ற பணிகளில் பணியாற்ற வருகின்றனர்; மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயரும் சட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்து அவர்களுக்கு சட்ட ரீதியான சலுகைகளை வழங்கிட வேண்டும்; அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு நேர பாடசாலை அமைத்து கல்வி வழங்க வேண்டும் என்றும் சிஐடியூ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel