விஜய் டிவி பிரபலம் புகழ் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் Zoo Keeper என்ற படத்தில் புகழ் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் புகழ் நடித்திருக்கிறார். Zoo Keeper படத்தை J. சுரேஷ் எழுதி இயக்கியுள்ளார். J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 14) Zoo Keeper படத்தின் டீசரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. காணாமல் போன ஒரு புலி குட்டியை தேடும் வனத்துறை அதிகாரிகள், அந்த புலி குட்டியை வளர்க்கும் புகழ், அதனால் புகழ் வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்னைகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதே இந்த படத்தின் கதை சுருக்கம்.
இந்த படத்தில் புகழுடன் இணைந்து நடிகர்கள் ஷிரின், சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடைபெற்றது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்!
எல்லா புகழும் உங்களுக்கே… ஆளுயர மாலையுடன் சென்ற அயலான் இயக்குநர்!