தோனி வரிசையில் யுவராஜ் சிங்… ரெடியாகும் பயோபிக்!

Published On:

| By Selvam

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

புகழ்பெற்ற டி சீரிஸ் நிறுவனம் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் இந்திய அணிக்கு யுவராஜ் சிங் அளித்த பங்கு, அவர் வாழ்வில் கடந்து வந்த இன்னல்கள், கிரிக்கெட் வரலாற்றில் மறக்கவே முடியாத 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்தது போன்ற நினைவுகளைக் கோர்த்து படமாக்கவுள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், “என்னுடைய கதை கோடிக்கணக்கான ரசிகர்களிடத்தில் போய் சேரவுள்ளது மிகப் பெருமிதமாக உள்ளது.

என் வாழ்க்கையின் ஏற்ற இறக்க காலங்களில் கிரிக்கெட் மட்டுமே எனக்கு மிகப் பெரிய பலத்தைத் தந்தது. இந்தத் திரைப்படம், நிச்சயம் வாழ்க்கையில் இன்னல்களை தாண்டி போராடுபவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளர் சீரமைப்பு பள்ளி நிர்வாகத்தை மாற்றுவதா? – அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

‘அண்டே சுந்தரனிகி’ பட தோல்விக்கு நான் தான் காரணம்: மனம் திறந்த நானி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel