இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று (ஆகஸ்ட் 31) தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளை ரசிகர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.
ரசிகர்களின் இத்தனை கொண்டாட்டத்திற்கும் காரணம் என்றும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் யுவனின் பாடல்களே,
தற்போது நேற்று முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பித்த நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் யுவன் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர், “அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த எனது தொழில்துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
நீங்கள் அனைவரும் என்மீது பொழிந்த அன்பில் நான் முழுவதுமாக நனைந்து விட்டேன். உங்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
குறுஞ்செய்திகள், டிவிட்டர் பதிவுகள், வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் அனைத்தையும் நான் பார்த்தேன். எனது 25 ஆண்டுக்கால இசை வாழ்க்கையில் என்னுடன் நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.
உங்கள் அனைவரது அன்பான ஆசீர்வாதத்திற்கு என் நன்றியை வார்த்தைகளால் தெரிவிப்பது போதுமானதாக இல்லை.
என் இதயத்திலிருந்து உங்கள் அனைவரையும் இசையால் மகிழ்விப்பதற்கு நான் நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் யுவன்.
மோனிஷா