பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது தந்தை இளையராஜாவின் வீட்டில் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னணி பாடகி மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ரசிகர்களைக் கவர்ந்தவர் பவதாரிணி. அவரது குரலில் வெளியான, ‘மயில் போல பொண்ணு ஒன்னு’, ‘ஒளியிலேயே தெரிவது தேவதையா’ போன்ற பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்கள் ஆகும்.
Stay strong, @thisisysr brother 💔
Condolences for the loss of your sister #Bhavatharini 💔#ripbhavatharinihttps://t.co/Wlpr8Pni4v
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) January 25, 2024
இந்த நிலையில் மறைந்த தன்னுடைய சகோதரி குறித்து யுவன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விழா மேடையொன்றில் பவதாரிணி மேடையில் அமர்ந்திருக்க யுவன் பேசுகிறார்.
அதில், ”மியூசிக் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நான் மியூசிக் படிக்கலை. பியானோல பர்ஸ்ட் கைய பிடிச்சு வச்சது என்னோட சிஸ்டர் பவதா தான். நீ வாசின்னு சொன்னாங்க,” என பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து தற்போது இந்த சோகத்தை யுவன் எப்படி தாங்கிக்கொள்ள போகிறார் என, ரசிகர்கள் உருக்கமுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடைசியாக யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படத்திற்காக ‘மெஹர்சைலா’ பாடலை, பவதாரிணி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…