தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ஆனால் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை தான். திரையுலகைப் பொறுத்தவரை யுவனின் பாடல்களுக்கு என, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த 25 ஆண்டுகளில் 170 படங்களுக்கு மேல் யுவன் இசை அமைத்துள்ளார். முக்கியமாக இவரது காதல் தோல்வி மற்றும் வாழ்க்கை தத்துவப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
இதனால் யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ‘யுவன் டிரக்ஸ்’ என்று தான் இவரது பாடல்களின் தலைப்பு இருக்கும். இந்நிலையில் யுவனின் இன்ஸ்டாகிராம் தற்போது ஆக்டிவாக இல்லை.
அவரே டீ-ஆக்டிவேட் செய்தாரா? இல்லை இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கி இருக்கிறதா? என்பது தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் தானாக முடங்கியதா? இல்லை அவரே வெளியேறி விட்டாரா? என்று ரசிகர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடைசியாக யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி விஜய்யின் ‘GOAT’ திரைப்படத்தில் இருந்து, பர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகியது. விஜய் அரசியலில் குதிக்க இருப்பதால் அவரது ரசிகர்கள் பாடலுக்கு ஆர்வமாக இருந்தனர்.
என்றாலும், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா? – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Anbe Vaa: திருமண பந்தத்தில் இணைந்த விராட்… குவியும் வாழ்த்துகள்!
‘கில்லி’க்கு போட்டியாக ரீ ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’… எப்போன்னு பாருங்க!