தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிள் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. திரைத் துறையில் இதுவரை சுமார் 170 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
முக்கியமாக இவரது காதல் தோல்வி மற்றும் வாழ்க்கை தத்துவப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலம். எனவே இவரின் பாடல்களை யுவன் டிரக்ஸ் என்று தான் குறிப்பிடுகின்றனர்.
தற்போது யுவன் தளபதி விஜய்யின் ‘GOAT’ திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ‘GOAT’ திரைப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில், ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியானது.
விஜய் அரசியலில் குதித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த பாடலை எதிர்பார்த்து ஆர்வமாக இருந்தனர். ஆனால் ‘விசில் போடு’ கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதற்கிடையில் திடீரென இன்று காலை (ஏப்ரல் 18) யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது. இதைப்பார்த்த ரசிகர்கள் யுவன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டினை டெலிட் செய்து விட்டாரா? இல்லை டெக்னிக்கல் கோளாறா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
Hey guys,
Thank you for the concerned messages. It's just a technical error, my team is trying to recover my Insta account and I'll be back soon 😊
Love, always!
— Raja yuvan (@thisisysr) April 18, 2024
இந்நிலையில் இதற்கு யுவன் சங்கர் ராஜா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “உங்களது அன்புக்கு நன்றி. அது ஒரு டெக்னிக்கல் கோளாறு தான். எனது டீம் சரி செய்து வருகின்றனர். சீக்கிரமே உங்களை இன்ஸ்டாவில் சந்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் சக்கரபாணியின் சக்கர வியூகம்!
Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?