யுவனின் பேபி கேர்ள் ஆல்பம்!

சினிமா

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்.

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி,விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே ரம்பம்பம் ஆரம்பம் என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பேபி கேர்ள் என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.

நாயகன் நாயகி ஆகிய இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்தத் தருணத்தில் புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதன்பின் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே தற்போது புதிதாக வித்தியாசமாகத் தெரிகிறது. இந்தச் சூழலை மையப்படுத்தி

“என்ன இது
புதிதாய் புதிதாய் புதிதாய்
எனக்குள் ஏதேதோ
புதிராய் புதிராய்
இரண்டாம் மூச்சுக் காற்று
உள்ளே அடிக்குதே”

என நாயகன் பாடுவது போல இந்தப் பாடல் உருவாகி உள்ளது.


பா.விஜய் எழுதியுள்ள இந்தப்பாடலைப் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக யூட்யூப் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலின் இடையே இடம்பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார்.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *