சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சியாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாள்தோறும் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது, அவர் சக போட்டியாளர்கள் மீது வீண் வார்த்தைகளை உபயோகித்து காயப்படுத்துகிறார் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண் போட்டியாளர்கள் உட்பட பலரும் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் முன்வைத்தனர்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு கருதி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக கூறினார்.
கமல் முடிவுக்கு எதிர்ப்பு!
கமல்ஹாசனின் இந்த முடிவு தவறானது என்றும், பிரதீப் ஆண்டனி போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்றும் சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை கமல் தன்னுடைய அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார் என்று கூறி அவருக்கு பதிலாக வேறொரு பிரபலத்தை தொகுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று விஜய் டிவி நிர்வாகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
ஏற்கெனவே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக நடிகர் கவின், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
லிப் லாக் கிஸ் சீன் இல்லாமல் இருக்காது!
இந்த நிலையில் நடப்பு சீசனில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட யுகேந்திரனின் மனைவி ஹேமமாலினியும், பிரதீப்புக்கு ஆதரவாக, கமல் மீது கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில், “கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.
புன்னைகை மன்னன் படத்தில் நடித்த போது 16 வயது ரேகாவுக்கு சொல்லாமல் லிப்லாக் கிஸ் கொடுத்த கமல்ஹாசன் பெண் பாதுகாப்பு பற்றி பேசலாமா?
கமல் நடித்த பெரும்பான்மையான படங்களில் லிப் லாக் கிஸ் சீன் இல்லாமல் இருக்காது.
இப்படியெல்லாம் இருக்கும்போது, அவரது அரசியலுக்காக ‘பெண்களுக்காக, பெண்கள் உரிமை’ என்று கமல் பேசுவது தனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
#BiggBossTamil7 #Yugendran wife direct attack on @ikamalhaasan he has no rights to talk about women safety after kissing Rekha without consent #PradeepAntony pic.twitter.com/KgZWirYH2g
— 20 BSC 1018 RAJAN A (@Rajan5727) November 5, 2023
ஹேமமாலினியின் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தற்போது கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காலமானார் புதுச்சேரி கண்ணன்- அவர் செய்த சாதனை இதுதான்!
எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக நீடிக்கும் சோதனை!