நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 3௦) மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று (டிசம்பர் 3௦) காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
https://twitter.com/TheCulpritVJ/status/1741037405904457911
சிரித்த முகத்துடன் அமைதியாக நிவாரண பொருட்களை வழங்கிய விஜய், ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொள்ளவும் தவறவில்லை.
இதனால் காலையில் இருந்து #NellaiWelcomesTHALAPATHY என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
இதற்கிடையில் நிவாரண நிகழ்வில் கலந்து கொண்ட, இளம்பெண் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ithu pothum 😀 #Nellai #ThalapathyVijay pic.twitter.com/8rzn9rY57l
— Manjari (@mazhil11) December 30, 2023
மாஸ்க் அணிந்த வந்த அந்த இளம்பெண் கையில் நிவாரண பொருட்களுடன் நின்ற விஜய்யை கண்டதும், சட்டென காலை தொட்டு கும்பிட்டார். விஜய்யால் தடுக்க முடியவில்லை.
தொடர்ந்து செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்க, விஜய் நிவாரண பொருட்களை கீழே வைத்து விட்டு போஸ் கொடுத்தார்.
அந்த இளம்பெண் செல்பி எடுத்தவுடன் வேகமாக நகர, அவரிடம் விஜய், ”நிவாரண பொருட்கள் வேண்டாமா? என கேட்டார். பதிலுக்கு அவர், ”அதெல்லாம் வேணாம்” என சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ”செல்பி எடுத்தது எல்லாம் சரி. ஆனா பதட்டத்துல மாஸ்க்க கழட்ட மறந்துட்டியேமா’ என கிண்டல் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா