yogibabu gave surprise gift to vishal

படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு பரிசளித்த யோகி பாபு

சினிமா

சாமி, சிங்கம் என பல மாஸ் மசாலா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான யானை படமும் செம ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் ஹரி.

ஏற்கனவே விஷால் நடிப்பில் ஹரி இயக்கிய தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து 3வது முறையாக இருவரும் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷால் 34 படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஷால் 34 படத்திற்கான படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற போது நடிகர் யோகி பாபு விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த பரிசை பெற்றுக்கொண்ட விஷால் அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு யோகி பாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

இஸ்ரேலில் இருந்து 21 பேர் தமிழகம் வருகை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *