கார் விபத்தில் சிக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று நடிகர் யோகி பாபு இன்று (பிப்ரவரி 16) விளக்கமளித்துள்ளார். Yogi Babu refuse car
இன்று அதிகாலை மூன்று மணியளவில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நடிகர் யோகி பாபு காரில் சென்றுகொண்டிருந்ததாகவும், அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்தபோது யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளானதாகவும் ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக, யோகி பாபு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நான் நலமாக இருக்கிறேன். விபத்தில் சிக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள ஓர் ஆடியோவில், “நான் விபத்தில் சிக்கியதாக வெளியாகியிருக்கும் செய்தி ஃபேக். அனைவரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
நேற்று இரவு படப்பிடிப்பிற்காக சென்றுகொண்டிருந்தபோது கம்பெனி வண்டி தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அந்த வண்டியில் நான் பயணிக்கவில்லை. மற்றொரு வண்டியில் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்று ரூட்டை க்ளியர் செய்தேன்” என்று யோகி பாபு தெரிவித்துள்ளார். Yogi Babu refuse car