கவுதம் மேனன் குரலில் யோகி பாபுவின் ’BOAT’ டீசர்!

Published On:

| By Monisha

yogi babu in boat movie teaser

‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’ போன்ற பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சிம்புதேவன். தமிழ் சினிமாவில் ஃபேன்டஸி படங்களுக்கான டிரெண்டை உருவாக்கியவரும் சிம்புதேவன் தான்.

தற்போது சிம்பு தேவா ’போட்’ (BOAT) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போட் படம் சர்வைவல் திரில்லர், பொலிடிகல் காமெடி ஜானரில் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புதேவனின் ’சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் (CDE) நிறுவனம்’ இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் போட் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 16) துபாயில் நடைபெற்றது. இந்த படத்தின் கதை 1943 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கிறது. ஜப்பான் இராணுவம் மெட்ராஸ் மீது குண்டு வீசுகிறது. போரில் இருந்து தப்பிக்க முன்பின் அறியாத 10 பேர் ஒரு படகில் ஏறி கடலுக்குள் செல்கின்றனர்.

இந்த பயணத்தில் அவர்களுக்குள் என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது, கடலில் இருந்தும் போரில் இருந்தும் அவர்கள் தப்பித்தார்களா இல்லையா..? என்பதே போட் படத்தின் ஒன் லைன். போட் படத்தின் டீசருக்கு இயக்குனர் கௌதம் மேனன் குரல் கொடுத்திருக்கிறார். தற்போது போட் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

பணியிட மாறுதல்: ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக் கல்வித்துறை!

IPL2024: ஹர்திக்குடன் சேர்ந்து ரோஹித்தின் முதுகில் குத்திய மும்பை… உண்மையில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel