இயக்குநர் டெல் கே கணேசன் இயக்கத்தில் உருவாகும் ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் களமிறங்குகிறார் நடிகர் யோகி பாபு.
இந்தப் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார் நடிக்கிறார் என சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. பிராண்டன் டி ஜாக்சன் எனும் இளம் இசைக் கலைஞரின் இசை வாழ்க்கை, போராட்டமே இந்த ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தின் கதையாகும்.
இந்தப் படத்தின் இயக்குநர் டெல் கே கணேசன் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் நெப்போலியனை ’டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரோஜ்( Devil’s night: Dawan of the Nain Rouge)’ படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
கைபா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்தப் படத்தில் நெப்போலியன், கிலிஃப்டன் போவெல், எரிக்கா பிங்கெட், ஒமர் கூடிங், டரினா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘டிராப் சிட்டி’ திரைப்படம் வருகிற டிச.13ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவி உடை அணியாதது ஏன்? – சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாகிச்சூடு!
கஞ்சா விற்பனை : மன்சூர் அலிகான் மகனை சிக்க வைத்த காண்டக்ட் நம்பர்… தட்டி தூக்கிய போலீஸ்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்… கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீபத்திருவிழா!