சிம்பு தேவன் – யோகி பாபு படத்தின் டீசர் வெளியீடு எப்போது?

Published On:

| By Selvam

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்புதேவன். தமிழ் சினிமாவில் ஃபேன்டஸி கதைக்களங்களில் தொடர்ந்து படங்களை இயக்கிய ஃபேன்டஸி படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியவர் சிம்புதேவன்.

சில மாதங்களுக்கு முன் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிம்புதேவன் – யோகி பாபு இணையும் அந்த படத்திற்கு BOAT என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

BOAT படம் சர்வைவல் திரில்லர், பொலிடிகல் காமெடி ஜானரில் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சிம்புதேவனின் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் (CDE) நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் BOAT படத்தின் டீசர் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 16 ஆம் தேதி துபாயிலுள்ள Al Ghurair Centre நடைபெறுவதாக இயக்குனர் சிம்புதேவன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். BOAT படம் முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட படம் என்பதையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிக்பாஸ் மிட் வீக் எவிக்‌ஷன்: வெளியேறப் போவது யார்?

‘மிஸ்டர் சந்திரமெளலி’ ரா.சங்கரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!