சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். அதன் பிறகு நடிகர் அஜித்குமார் – ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233 வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஆனால் தற்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்களில் பிசியாக இருப்பதால், ஹெச்.வினோத்தின் KH 233 படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் ஹெச்.வினோத் தீரன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அந்தப் படத்திற்கான பணிகளும் தற்போது தாமதம் ஆவதால், ஹெச்.வினோத் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அது என்னவென்றால், மிகக் குறுகிய காலகட்டத்தில் ஒரு காமெடி கலந்த அரசியல் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை ஹெச்.வினோத் இயக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டு இருப்பதாகவும், கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
அன்னபூரணி பட சர்ச்சை: நயன்தாரா வருத்தம்!
தமிழ் தெரியாத ரயில்வே ஊழியர்… திண்டாடும் பயணிகள்!
’பணிநீக்க நடவடிக்கை தொடரும்.. ஆனால்’ : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை