நடிகர் யோகிபாபு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடிக்க வர மறுக்கிறார் என சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்த நிலையில், என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் பொய்யானது என்று அவர் கூறியுள்ளார்.
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லக்கிமேன்’. இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல இந்தப்படம் என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலத்தான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலைந்து காட்சிகள் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன்.
அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலத்தானே?. நான் ஷூட்டிங்கிற்கு வருவதில்லை என்று என் மீது சில புகார்கள் வந்துள்ளது. நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் பொய்யானது. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டு தான் படம் செய்வேன்” என்றார்.
இராமானுஜம்
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!