பேரன்பு படத்தின் வெற்றிக்கு பிறகு ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை.
ராம் இயக்கிய கற்றது தமிழ், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் அஞ்சலி நடித்துள்ள நான்காவது படம் இது.
சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் நெதர்லாந்தின் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் Big Screen பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 2) ஏழு கடல் ஏழு மலை படத்தின் Glimpse வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நிவின் பாலி, அஞ்சலியிடம் ஒரு 4000 வருடங்களுக்கு முன் தான் பார்த்து காதல் வயப்பட்ட ஒரு ராணி பற்றிய கதையை சொல்கிறார். அதன்பிறகு சூரியுடன் வரும் காட்சியில் தனக்கு வயது 8,822 என்று கூறுகிறார். Glimpse வீடியோ முழுக்கவே ஒரு ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட படம் போல தான் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஏழு கடல் ஏழு மலை படத்தின் இந்த Glimpse வீடியோவே படத்தின் மீதான எதி்பார்ப்பை அதிகரிக்கிறது. தற்போது இந்த Glimpse வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“வீண் பயிற்சியில் அமலாக்கத் துறை” : கார்த்தி சிதம்பரம்
துணைவேந்தர் ஜெகன்நாதன் ஜாமீன் விவகாரம்: சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!