CM ஆக நடிக்கும் ஜீவா : யாத்ரா 2 டீசர் இதோ!
2019ல் தெலுங்கில் வெளியான யாத்ரா படம், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார்.
இயக்குனர் மஹி வி ராகவ் யாத்ரா படத்தை இயக்கி இருந்தார். யாத்ரா படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்றதால் யாத்ரா 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
யாத்ரா 2 படம் தற்போதைய ஆந்திரா முதலமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது. யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மஹி வி ராகவ் தான் இயக்கியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். சமீபத்தில் யாத்ரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று (ஜனவரி 5) யாத்ரா 2 படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்கொண்ட பிரச்னைகள், போராட்டங்கள், மற்றும் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது என அனைத்து முக்கிய தருணங்களும் யாத்ரா 2 படத்தில் இடம்பெற்றுள்ளது.
யாத்ரா 2 படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்திருப்பதால் தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
“ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் வருது” : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!
உங்கள் வங்கிக் கணக்கு ஆக்டிவ் ஆக இல்லையா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்!