தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல
ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
இந்த வருடம் ஏப்ரல் 28 அன்று வெளியான இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 19.50 கோடியை வருவாயாக பெற்றது.
இந்த நிலையில், நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டுள்ள யசோதா திரைப்படத்தை மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.
ஹரி- ஹரிஷ் இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் இன்று(அக்டோபர் 27 ) மாலை வெளியாக உள்ளது.

ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை அந்தந்த மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளார்கள். தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா, தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டா, மலையாள டிரைலரை துல்கர் சல்மான், கன்னட டிரைலரை ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தி டிரைலரை வருண் தவன் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
ஹீரோக்களின் படங்கள்தான் சமீப காலங்களில் பான் இந்தியா படங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போது சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமானுஜம்
கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் – வெடித்த அண்ணாமலை
தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? – தனிநபர் யாகம் நடத்த உயர் நீதிமன்றம் தடை!