யாஷ் 19 படத்தின் டைட்டில் இதுதான்!

சினிமா

கே.ஜி.எஃப் 1&2 படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் மாஸ் ஹீரோவாக இடம் பிடித்தவர் கன்னட நடிகர் யாஷ்.

கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதி காட்சியில் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்கான லீட் இருந்ததால் அடுத்து நடிகர் யாஷ் கே.ஜி.எஃப் 3 படத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கே.ஜி.எஃப் 3 படத்திற்கு முன் ஒரு புதிய படத்தில் நடிக்க போவதாக யாஷ் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து யாஷின் 19 வது படத்தை இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் யாஷ் 19 படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக் குழு.

யாஷ் 19 படத்திற்கு “Toxic” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் யாஷ் 19 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான மூத்தோன் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதால் Toxic படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து விட்டது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“Meftal மாத்திரையை பயன்படுத்தாதீங்க” : மருந்தியல் ஆணையம் சொல்வது என்ன?

மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *