’இந்த நிலம் எதனால படைக்கப்பட்டது?’ என்கிற பின்னணி வசனம் இடம்பெற்றுள்ள ட்ரெய்லர், யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநரின் படம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
மறைந்த இயக்குனர் எஸ். பி ஜனநாதனின், துணை இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம், யாதும் ஊரே யாவரும் கேளீர்’.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா, கரு பழனியப்பன் நடித்துள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும் பகுதி காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னரும், வியாபாரம், பைனான்ஸ் காரணங்களால் படத்தின் வெளியீடு தாமதமானது.
ஒருவழியாக, தற்போது இப்படம் மே மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முன்னோட்டம் நேற்று (மே 15) மாலை வெளியிடப்பட்டது.
அகதிகள் சம்பந்தமான சர்வதேச அரசியலை திரைக்கதையாக கொண்ட படமாக யாதும் ஊரே யாவரும் கேளீர் படம் இருக்கும் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது.
குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பிரதானமாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உணர்த்துகின்றன.

மக்கள், நாடு, நிலம், அதனை சார்ந்த அரசியல் என ட்ரெய்லரின் பின்னணியில் ஒலிக்கும் வசனங்கள் ட்ரெய்லர் பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கின்றன.
விஜய் சேதுபதியின் வெவ்வேறு தோற்றங்கள், வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனியின் மிரட்டலான தோற்றம் கவனத்தைப் பெறுகின்றன.

இடது சாரி கொள்கைப் பிடிப்புள்ளவராக தன்னை பொது வெளியில் அடையாளப் படுத்திக்கொண்டவர் மறைந்த இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் அவரது உதவியாளர் இயக்கியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் அவரது கொள்கை, சிந்தனைகளை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள தலையில்லாத புத்தர் சிலை, பசியில் வாடும் உயிர்கள், போர்க் காட்சிகள் உள்ளிட்டவை படம் குறித்து நம்பிக்கையைக் கூட்டுகின்றன.
இராமானுஜம்
சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10
நீலகிரி கோடை விழா: சிறப்பு சுற்றுலா தகவல் மையம் திறப்பு!
IPL 2023: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்
உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!
கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?