நேரில் சந்தித்ததே இல்லை… சஞ்சய் தத்துக்கு 72 கோடி சொத்து வழங்கிய பெண்!

Published On:

| By Kumaresan M

சஞ்சய் தத் மீது இனம் புரியாத பாசம் கொண்ட பெண் ஒருவர் தனக்கு சொந்தமான 72 கோடி சொத்துக்களை தானம் செய்தது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த பெண் நிஷா பாட்டீல். 62 வயதான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன் தனக்கு சொந்தமான 72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நடிகர் சஞ்சய் தத் பெயருக்கு மாற்றும்படி தனது வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நிஷா பாட்டீல் விருப்பப்படி சொத்துக்களை சஞ்சய் தத் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. நிஷா பாட்டீல் இத்தனைக்கு சஞ்சய் தத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட சந்தித்தது இல்லை. இனம் புரியாத பாசம் காரணமாக தனது சொத்துக்களை அவரின் பெயருக்கு மாற்றியள்ளதாக தெரிகிறது.

நிஷா பாட்டீலின் மறைவுக்கு பிறகு, போலீசார் சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த சொத்துக்கள் குறித்து விவரம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு, சஞ்சய் தத் அதிர்ந்து போனார். சஞ்சத் தத் இது குறித்து கூறுகையில், ‘நிஷா பாட்டீலை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் எனது பெயரில் எழுதிய சொத்துக்களை எதையும் பெறப் போவதில்லை. இந்த சம்பவம் எனது மனதை கவலையடைய செய்துள்ளது. நிஷா பாட்டீலின் சொத்துக்கள் அவரின் குடும்பத்தினரிடத்தில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அப்போது தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தங்களது 17வது திருமண நாளை முன்னிட்டு, power of love என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சஞ்சய் தத்தின் திருமண நாளை முன்னிட்டு நிஷா பாட்டீல் சொத்து வழங்கிய செய்தியும் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share