தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தோலுரிக்கும் விட்னஸ்: டிசம்பர் 9 ரிலீஸ்!

சினிமா

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ’விட்னஸ்’.

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக உணரவைக்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பாக டி.ஜி.விஷ்வ பிரசாத் தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.

witness movie in ott relese

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 9ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இராமானுஜம்

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் மரணம்!

ஆணாதிக்கம் நிறைந்ததா கட்டா குஸ்தி: ஒரு பார்வை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *