கேப்டன் மில்லர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தனுஷின் D51 படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
D51 படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார். பொலிட்டிக்கல் மாஃபியா கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் D 51 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா இந்த படம் குறித்து பேசியதாவது, “இயக்குநர் சேகர் கம்முலா இப்படம் குறித்து சொன்னபோதே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. தனுஷ் சார் மிகப்பெரிய நடிகர். அவருடன் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
25 சதவீதம் குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
ரொம்பவே காஸ்ட்லி… எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்