பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி முதல் படத்திலேயே தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அதன்பிறகு அவர் மலையாளத்தை விட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். தமிழிலும் அவர் நடித்து சமீபத்தில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. win national award- says sai pallavai
அடுத்து, நாகசைதன்யாவுடன் அவர் இணைந்து நடித்த தண்டேல் என்கிற தெலுங்கு படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைக்காததுதான் அவரின் ஒரே வருத்தாமாக உள்ளது. win national award- says sai pallavai
சமீபத்தில் கலாட்டா மீடியாவுக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய பாட்டி 21 வயதாக இருந்த போது எனக்கு திருமணத்தின் போது நான் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக ஒரு புடவையை பரிசளித்துள்ளார். திருமணம் எப்போது என்பது எனக்கு தெரியாது. அதே சமயம் தேசிய விருது போன்ற நாம் விரும்பும் உயரிய விருதை பெறும் போது, அந்த புடவையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். win national award- says sai pallavai
கடந்த 2022 ஆம் ஆண்டு கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருசிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.win national award- says sai pallavai