’துணிவு’ சாதனையை முறியடிக்குமா விஜய்யின் ’வாரிசு’?

சினிமா

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

உச்சநட்சத்திரத்தின் திரைப்படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் டிசம்பர் 30 அன்று வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வாரிசு டிரெய்லர் வெளியீடு

இந்நிலையில் வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் புதிய அப்டேட்டை இன்று வெளியிட்டது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளதை சூசகமாக சீ ’யு’ சூன் நண்பா (See ‘U’ soon nanba) என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக விஜய் திரைப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல் ஆகியவை வெளியாகும் நேரமெல்லாம் யூடியூப்பில் அதிரிபுதிரி சாதனை படைக்கும்.

இந்நிலையில் நாளை பெரும் எதிர்பார்க்கும் இடையே வெளியாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் அஜித்தின் துணிவு டிரெய்லர் பெற்ற பார்வைகளை முறியடிக்குமா என்ற கேள்வியோடு ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கிறிஸ்டோபர் ஜெமா

காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்: பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிப்பது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *