தமிழகத்தில் வெளியாகுமா நயன்தாராவின் ‘கோல்டு’ ?

சினிமா

பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் ‘கோல்டு’. பிரேமம், நேரம் படத்தை தொடர்ந்து ஏழு வருடங்கள் கழித்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.

ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.  ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

ஓணம் பண்டிகை அன்று (செப்டம்பர் 8) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதேநாளில் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை  கோவை சுப்பையா பெற்றிருந்தார்.

அதற்காக அவர் கொடுத்த விலை  90 லட்சம் ரூபாய். ஏற்கனவே இவர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கி வெளியிட்டவர்.

அறிவித்தபடி ஓணம் பண்டிகை நாளில் அப்படம் வெளியாகவில்லை. அதன்பின், டிசம்பர் ஒன்றாம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்று தமிழகம் தவிர்த்து கோல்டு வெளியானது.

நிர்வாக குளறுபடி காரணமாக தமிழகத்தில் தமிழில் டிசம்பர் 1 வெளியாகவில்லை. டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என கூறினார்கள்.

இதற்கிடையில் பேசிய தொகையை முழுமையாக செலுத்தவில்லை என்பதுடன் ஒரு நாள் தாமதம், மலையாளத்தில் படம் வெற்றிபெறவில்லை என்பதை காரணமாக கூறி ஏற்கனவே முன்பணமாக கொடுத்த 55 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்க முடியாது. இந்தப்பணமே வருமா? எனத் தெரியாது. எனவே மேற்கொண்டு பணம் கேட்காமல் படத்தைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் சுப்பையா.

படத்தின் தயாரிப்பாளரோ, ஒருநாள் தாமதமானதால் பேசிய தொகையிலிருந்து இருபது லட்சம் குறைத்துக் கொள்ளுங்கள், மீதிப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

படத்தின் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லி தமிழ்நாட்டில் படத்தை வெளியிட மறுத்துவிட்டாராம் சுப்பையா.

இதனால் அவர் மீது மலையாளத் தயாரிப்பாளர் கடுங்கோபத்தில் இருக்கிறார். அதேநேரம் கொடுத்த பணத்தை எப்படி மீட்பது? என்று குழப்பத்தில் இருக்கிறாராம் சுப்பையா.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அந்தப்படம்  கர்நாடகாவில் ஏழு திரையரங்குகளில் தமிழ் பதிப்பில் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இராமானுஜம்

அதிமுகவிலிருந்து கோவை செல்வராஜ் விலகல்!

சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *