பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அன்னபாரதி: கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து அக்ஷயா, பவா செல்லத்துரை, வினுஷா, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர் வெளியேறிய நிலையில் புதிதாக உள்ளே சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

பிரதீப், விசித்ரா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், நிக்ஷன், ஐஷு, அர்ச்சனா, பிராவோ,ஜோவிகா என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இதனால் இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வந்தது. இதில் வாக்கெடுப்பு அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளரும், சின்னத்திரை பிரபலமுமான அன்னபாரதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இன்று காலை நடந்த பிக்பாஸ் ஷூட்டிங்கில் அவர் வெளியேறிய விவரம் தெரிய வந்துள்ளது.

விஜே அர்ச்சனாவை ஒரு சம்பவத்தில் அழவைத்த இவர் வீட்டுக்குள் பல்வேறு சம்பவங்களை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஒரு படத்தில் விவேக் மாடிப்படி ஏறி இறங்குவது போல, உள்ளே சென்ற ஒரே வாரத்தில் வெளியேறி இருக்கிறார். இதனால் தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கசிய அவர்களுக்கு விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை.

வீட்டுக்குள் சென்ற உடனே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை நிரூபிக்க எந்தவொரு வாய்ப்பையும் பிக்பாஸ் வழங்கவில்லை. உள்ளே எத்தனையோ போட்டியாளர்கள் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்க இவரை வெளியே அனுப்பியது நியாயமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இளம் போட்டியாளர் அக்ஷயாவுக்கும் இதேபோல தான் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?: வெளியான மருத்துவ அறிக்கை!

பருவமழை: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0